மாநில செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினரிடையே மோதல் - வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு + "||" + Conflict between two factions near Aruppukkottai - Police firing into the sky

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினரிடையே மோதல் - வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு

அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினரிடையே மோதல் - வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு
அருப்புக்கோட்டை அருகே இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து திரும்பியவர்களின் வாகனம் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனை தொடர்ந்து கற்களை வீசியவர்கள் மீது வாகனத்தில் வந்தவர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து மோதல் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி போராட்டத்தை கலைக்க முயன்றனர். பின்னர் கலவரத்தை  கட்டுப்படுத்த வானத்தை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அருப்புக்கோட்டை நான்கு வழிச்சாலை கட்டங்குடி விலக்கில் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துகளை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.