தேசிய செய்திகள்

மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு + "||" + Madhya Pradesh government officials threatened: 350 people, including BJP general secretary, sued

மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு

மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல்: பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு
மத்திய பிரதேச அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய பா.ஜனதா பொதுச்செயலாளர் உள்பட 350 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தூர், 

மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு, பா.ஜனதா தொண்டர்களை துன்புறுத்துவதாக அந்த கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அரசு அதிகாரிகள் பா.ஜனதாவினர் மீது பாகுபாடு காட்டுவதாக கட்சியின் பொதுச்செயலாளர் விஜய் வர்கியா குற்றம் சாட்டி வருகிறார்.

எனவே அரசு அதிகாரிகளை கண்டித்து தனது சொந்த ஊரான இந்தூரில் அவர் கடந்த 3-ந்தேதி போராட்டம் நடத்தினார். இதில் பேசிய அவர், அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளை கடுமையாக சாடினார்.

அவர் கூறுகையில், ‘அரசு அதிகாரிகளை நாங்கள் சந்திக்க விரும்புகிறோம் என எழுத்துப்பூர்வமாக கடிதம் அளித்தும் அவர்கள் மறுத்து விட்டனர். தாங்கள் வெளியே சென்றிருக்கிறோம் என்பதை கூட அவர்கள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. இதை பொறுக்க முடியாது. எங்கள் சங் (ஆர்.எஸ்.எஸ்.) பரிவார தலைவர்கள் இங்கு இருக்கிறார்கள். இல்லையென்றால் இன்று நாங்கள் இந்தூரை கொளுத்தியிருப்போம்’ என்று கூறினார்.

இந்த வீடியோ பதிவு மாநிலம் முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து விஜய் வர்கியா மற்றும் பா.ஜனதா எம்.பி. சங்கர் லால்வானி உள்பட 350 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல்
அரசு வேலை வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகன், மகளுடன் தீக்குளிக்க போவதாக பெண் மிரட்டல் விடுத்தார்.
2. மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு போனில் தொடர் மிரட்டல் ‘நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது’
நடிகை கங்கனா ரணாவத் பிரச்சினையில் தலையிடக்கூடாது என்று மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு போனில் தொடர் மிரட்டல் அழைப்புகள் வந்தன.
3. சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்வேன் - நடிகை நமீதா பேட்டி
சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்காக பிரசாரம் செய்ய உள்ளதாக நடிகை நமீதா பேட்டியளித்துள்ளார்.
4. விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல்
முசிறி அருகே கொளக்குடியில் வழிபாட்டிற்காக வைத்திருந்த விநாயகர் சிலைகளை எடுத்து சென்றதால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி இந்து முன்னணியினர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5. பேஸ்புக்-டுவிட்டரில் கொலை மிரட்டல் வருவதாக பேஸ்புக் உயர் அதிகாரி போலீசில் புகார்
பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்கள் வருவதாக பேஸ்புக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.