தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு: உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல் + "||" + Uttar Pradesh government should apologize to those who fought for citizenship law - Mayawati

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு: உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் சிறையில் அடைப்பு: உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை சிறையில் தள்ளியதற்கு உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையால் 19 பேர் பலியானார்கள். போராட்டம் நடத்திய 1,200 பேர் கைது செய்யப்பட்டனர். 5 ஆயிரத்து 558 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் நேற்று இந்தியில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடியவர்களை எந்த விசாரணையும் இல்லாமல் யோகி ஆதித்யநாத் அரசு சிறையில் தள்ளுகிறது. பிஜ்னோர், சம்பல், மீரட், முசாபர்நகர், பிரோசாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் நடத்திய அப்பாவிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது.

இதற்காக பொதுமக்களிடம் உத்தரபிரதேச அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். அப்பாவிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். போராட்டங்களில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நியாயமான இழப்பீடு அளிக்க வேண்டும்.

உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை பகுஜன் சமாஜ் கட்சி குழு 6-ந் தேதி (இன்று) சந்திக்கிறது. போராட்ட வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி மனு கொடுக்க உள்ளது. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் திருமணம் செய்துகொண்ட ஜோடி
கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்துகொண்டது.
2. குடியுரிமை திருத்த சட்டத்தை புதைத்துவிட வேண்டும் - மதுரை போராட்டத்தில் வைகோ பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தை அடியோடு புதைத்துவிட வேண்டும் என்று மதுரை போராட்டத்தில் வைகோ பேசினார்.
3. இந்தியாவின் புதிய குடியுரிமைச் சட்டம் நாட்டின் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் - அமெரிக்கா
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் முஸ்லிம் சமூகத்தை மோசமாக பாதிக்கும் என சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எஃப்) தெரிவித்துள்ளது.
4. கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: போலீசார் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமிய கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தபோது, மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்ற முற்றுகை போராட்டம்: இஸ்லாமிய அமைப்பினர் பேரணி
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது.