மாநில செய்திகள்

தமிழக அரசுக்கு விருது மழை பொழிந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் + "||" + Tamil Nadu Govt. Honors rain - Chief Minister Edappadi Palanisamy proud

தமிழக அரசுக்கு விருது மழை பொழிந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

தமிழக அரசுக்கு விருது மழை பொழிந்து வருகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசுக்கு, விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் இன்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தான் அரசுமுறை பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம், லண்டனில் உள்ள புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். மேலும் அதன் மூலம் தமிழகத்தில் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அரசின் கொள்கைகள், திட்டங்களுக்காக, விருது மழை பொழிந்து வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டு, தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. விரைவில் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆம்னி பஸ்களில் முன்பதிவு நிறுத்தம் -பஸ் சேவை தொடருமா? என்பது இன்று முடிவாகிறது
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு சுமார் 1,700 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
2. வரும் 31 ஆம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு விலக்கு: பள்ளிக்கல்வித்துறை
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தப்பட்டுள்ளது.
3. தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் - சென்னை செசன்சு கோர்ட்டு ‘சம்மன்’
மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் சிறந்த முறையில் நிர்வாகம் செய்து வரும் மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
4. திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
திருச்சியில் பா.ஜனதா நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
5. தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக அரசின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய பொன்மாணிக்கவேலுக்கு அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.