தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு + "||" + pm modi meets nobel laureate richard thaler

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு

டெல்லியில் பிரதமர் மோடியுடன் ரிச்சர்ட் தாலர் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை நோபல் பரிசு வென்ற ரிச்சர்ட் தாலர் சந்தித்தார்.
புதுடெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் தாலர். நடத்தை பொருளாதாரத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இவர் இந்தியா வந்துள்ளார். அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.


இந்த சந்திப்பின் போது பல்வேறு சுவாரஸ்யமான அம்சங்களை தாலரிடம் இருந்து அறிந்து கொண்டதாக பிரதமர் மோடி பின்னர் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் இந்தியா அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் மற்றும் ‘நட்ஜ்’ கோட்பாட்டின் சிறப்பு அம்சங்கள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

நடத்தை அறிவியல், அரசியல் கோட்பாடு மற்றும் நடத்தை பொருளாதாரத்தில் நேர்மறையான வலுவூட்டல் மற்றும் மறைமுக ஆலோசனைகளை பரிந்துரைக்கும் கருத்தே ‘நட்ஜ்’ கோட்பாடு ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
டெல்லியில் குற்றவழக்குகளில் தொடர்புடைய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பு; சீனாவுக்கு சிக்கல்
டெல்லியில் நடக்கும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு இந்திய அரசு நேற்று முன்தினம் விசா வழங்கி அனுமதி அளித்துள்ளது.
3. அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பாரா?
டெல்லி முதல் மந்திரியாக 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் நாளை பதவியேற்கிறார்.
4. இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் : டிரம்ப் டுவிட்
இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
5. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் இருவரும் பேச்சு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 24-ந் தேதி ஆமதாபாத் வந்து தரை இறங்குகிறார். அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார். இருவரும் 1¼ லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட கூட்டத்தில் பேசுகிறார்கள்.