தேசிய செய்திகள்

லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம் + "||" + Bus Carrying 50 Catches Fire In UP's Kannauj After Accident, Deaths Feared

லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம்

லாரியுடன் மோதியதில் பேருந்து தீ பிடித்தது ; 20 பேர் பலி என அச்சம்
உத்தர பிரதேசத்தில் பேருந்து - லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், இரு வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன.
லக்னோ,

உத்தர பிரதேசத்தில்,  ஜெய்பூர் நோக்கி 50 பயணிகளுடன் படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது.  இந்த பேருந்து கன்னூஜ் மாவட்டம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் இரு வாகனங்களும் தீ பற்றி எரிந்தன.  தீ பிடித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் அபாயக்குரல் எழுப்பினர்.  

தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த பயங்கர தீ விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  20 -பேரை இன்னும் மீட்க முடியாததால், அவர்கள் உயிரிழந்து இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் மந்திரி உயிரிழப்பு
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தர பிரதேசத்தில் கேபினட் மந்திரி உயிரிழந்தார்.
2. உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
3. ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. போலீசாரைக் சுட்டுக்கொன்ற உ.பி ரவுடி டெல்லி அருகே பதுங்கல் ! கைது செய்ய போலீசார் தீவிரம்
ரவுடி விகாஸ் துபே டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் போலீசார் திவீரமாக தேடி வருகின்றனர்.