தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று கொல்கத்தா பயணம், மம்தா பானர்ஜியை சந்திக்க வாய்ப்பு + "||" + PM Modi May Share Stage With Mamata Banerjee During Kolkata Visit

பிரதமர் மோடி இன்று கொல்கத்தா பயணம், மம்தா பானர்ஜியை சந்திக்க வாய்ப்பு

பிரதமர் மோடி இன்று கொல்கத்தா பயணம், மம்தா பானர்ஜியை சந்திக்க வாய்ப்பு
பிரதமர் மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மேற்கு வங்காளம் செல்கிறார்.
கொல்கத்தா,

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இன்று கொல்கத்தா செல்கிறார்.  கொல்கத்தாவில் உள்ள பழைய கரன்சி கட்டடம், பெல்வேடியர் இல்லம், மெட்கால்ஃப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவரங்கம் ஆகிய 4 கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.  

மத்திய கலாச்சாரத் துறை, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த 4 காட்சிக் கூடங்களை புதுப்பித்து, புனரமைத்திருப்பதோடு, பழைய கலைக்கூடங்களை சீரமைத்திருப்பதுடன் புதிய கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாரம்பரிய கட்டிடங்களை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  இன்றும் நாளையும் நடைபெறும் கொல்கத்தா துறைமுக சபையின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் கலந்து கொள்கிறார்.  தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 

பிரதமர் மோடியும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், இன்று சந்திக்க வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் இரு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இரு தலைவர்களும் ஒரே மேடையில்  தோன்ற வாய்ப்பு உள்ளது. இதன்பிறகு, ராஜ்பவனில் இன்று இரவு, பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி 2-வது முறையாக சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மத்திய அரசின்  குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய இரண்டையும் கடுமையாக எதிர்த்து வருபவர் மம்தா பானர்ஜி.  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டங்களை மம்தா பானர்ஜி முன்னெடுத்து வருகிறார். இந்த சூழலில், இரு தலைவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாரவ் சந்தித்தார்.
2. பெங்களூரு சர்ச்தெருவில் சுவர்கள், கடை ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிரான வாசகங்கள்
பெங்களூரு சர்ச்தெருவில் உள்ள சுவர்கள், கடைகளின் ஷெட்டர்களில் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
3. பிரதமர் மோடியுடன் நாராயணசாமி சந்திப்பு: கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தல்
பிரதமர் மோடியை நாராயணசாமி நேரில் சந்தித்தார். அப்போது அவர் புதுச்சேரி கவர்னர் கிரண்பெடியை மாற்ற வலியுறுத்தியதாக கூறினார்.
4. பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
5. நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் - பிரதமர் மோடி
நாட்டில் உள்ள 5 அருங்காட்சியகங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.