உலக செய்திகள்

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார் + "||" + PM Modi condoles demise of Oman Sultan Qaboos

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்

ஓமன் மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்
ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம் ஓமனை ஆட்சி செய்த மன்னர் காபூஸ் பின் சையத் காலமானார்.
மஸ்கட்,

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79. 
1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். 

இந்நிலையில், நேற்று காபூஸ் உயிரிழந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த காபூஸ், அடுத்த சுல்தான் யார் என்பதையும் அறிவிக்கவில்லை. 

இதனால் அந்நாட்டு வழக்கப்படி மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த 50 பேர் நாளைக்குள் கூடி புதிய சுல்தானை தேர்வு செய்வார்கள். சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவையொட்டி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி இரங்கல்

ஓமன் மன்னர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள  பிரதமர் மோடி, “ சுல்தான் காபூஸ் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.  ஓமன் மன்னர், தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர். ஓமனை நவீன, செழுமைமிக்க நாடாக மாற்றியவர் சுல்தான் காபூஸ். ஓமனுக்கும் உலகுக்கும் சமாதானத்தின் கலங்கரை விளக்கமாக சுல்தான் காபூஸ் திகழ்ந்தார்” என்று தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேச்சு
மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் பிரதமர் மோடி பேசினார்.
2. கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி
கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
3. உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
4. தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
5. இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை
இலங்கை பிரதமர் ராஜபக்சேவுடன் வரும் 26 ஆம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.