மாநில செய்திகள்

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை- கே.எஸ். அழகிரி + "||" + No quarrel with DMK; Did not withdraw from the coalition KS is AZakiri

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை- கே.எஸ். அழகிரி

திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை- கே.எஸ். அழகிரி
திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. கூட்டணியில் இருந்து விலகவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.
சென்னை

நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது.  ஒன்றிய தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகிய பதவியிடங்களை தராதது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்று திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டது.

இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகப்போவதாவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுகவுடனான நட்பு எப்போதும் போல தொடருகிறது . திமுகவுடன் எந்த மனக்கசப்பும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து விலகவில்லை. அறிக்கையோடு முடிந்தது அது. திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை கூட்டணி  என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்த மு.க.ஸ்டாலின்
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
2. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் -மு.க.ஸ்டாலின்
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசுவதை திமுக-காங்கிரஸ் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை - துரைமுருகன்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
4. திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு
திமுகவுடன் மோதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
5. திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறக்கமாட்டார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்
திமுக ஆட்சியில் காவல்துறையினர் பட்ட இன்னல்களை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை