பிற விளையாட்டு

வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...! + "||" + Shivangini Gohain #Assam seriously injured in Archery practice KheloIndiaYouthGames2020. Are we actually maintaining all safety measures during such games?

வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!

வில்வித்தை பயிற்சியின் போது விபரீதம்... சிறுமியின் தோளில் பாய்ந்த அம்பு...!
அசாம் மாநிலத்தில் வில்வித்தை பயிற்சியின் போது 12 வயது சிறுமியின் மீது அம்பு பாய்ந்தது.
கவுகாத்தி

அசாமின் சபுயாவில் அந்த மாநிலத்திற்கான விளையாட்டு அமைப்பு  உள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்று  12 வயதிற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்து சிவாங்கினி கோகின் என்ற 12 வயது சிறுமியின்  வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.

இதனால் வலியால் துடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு எலும்பை துளைத்துள்ளது. தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள்- வந்தனா,மோனிகா
ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்படுவது தான் அணியின் ஒரே குறிக்கோள் என அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வந்தனா,மோனிகா கூறி உள்ளனர்.
2. பல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன-முஷ்டாக் அகமது
பல ஆண்டுகளாக ஹாக்கி வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கைக் கொண்டுள்ளன: ஹாக்கி இந்திய தலைவர் முஷ்டாக் அகமது தெரிவித்து உள்ளார்.
3. கோவையில் இருந்து அசாம் சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியில் இருந்து 145 பேர் அனுப்பிவைப்பு
கோவையில் இருந்து அசாம் மாநிலம் சென்ற சிறப்பு ரெயிலில் காட்பாடியிலிருந்து நேற்று 6-வது கட்டமாக 145 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
4. அசாம்:வெளியூரில் சிக்கியுள்ள மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 3 நாட்களுக்கு பேருந்து சேவை துவக்கம்
அசாமில் வெளி மாவட்டங்களில் சிக்கியுள்ள பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 நாட்கள் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது.