கிரிக்கெட்

காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா + "||" + Cricket insignificant with bushfires raging: Aaron Finch

காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா

காட்டுத்தீ சோகத்தை போக்க இந்திய அணியை வென்று காட்டுவோம்-ஆஸ்திரேலியா
காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம் என கேப்டன் பிஞ்ச் கூறினார்.
மும்பை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து   3 ஒரு நாள் போட்டிகள் தொடரில்  விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று இந்தியா வந்தனர். முதல் ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வருகிற  14ம் தேதி தொடங்க உள்ளது.

இந்த நிலையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் கூறியதாவது:-

இந்திய அணியை சொந்த மைதானத்தில் எதிர்கொள்வது சிரமமான ஒன்று தான். கடைசியாக இந்தியாவில் நடைபெற்ற தொடரை நாங்கள் கைப்பற்றினோம். எனவே அதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்.

ஆஸ்திரேலியாவில் எரிந்து வரும் காட்டுத்தீயால் அனைவரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். காட்டுத்தீயால் சோகத்தில் உள்ள ஆஸ்திரேலிய மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பதற்காக இந்திய அணியை வென்று காட்டுவோம்“ என கூறினார்.

ஆஸ்திரேலிய அணி கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரில் 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்!
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார்!
2. பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்...பிரபல கிரிக்கெட் வீரர் மனைவியின் பரிதாப நிலை
பாலியல் பலாத்கார மிரட்டல்! ஒவ்வொரு நொடியும் பயம்... வாழ்த்து கூறிய பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
3. 2-வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.
4. சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக புகார்: ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட்
சானிடசரை பந்தில் ஊற்றி தேய்த்ததாக எழுந்த புகாரையடுத்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
5. ஐபிஎல் 2020 போட்டி அட்டவணை நாளை அறிவிக்கும் வாய்ப்பு...?
ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று மாலை அல்லது நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

ஆசிரியரின் தேர்வுகள்...