மாநில செய்திகள்

இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை - ப.சிதம்பரம் + "||" + Indians are innocents who believe govt claims: P Chidambaram

இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை - ப.சிதம்பரம்

இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை - ப.சிதம்பரம்
இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை,

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் கூறியதாவது:

இந்திய மக்களை போன்ற அப்பாவிகளை நான் எங்கும் பார்த்தது இல்லை. நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளை தான் நம்புகிறார்கள்.  இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி கொடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். 99 சதவீத கிராமங்களில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்ததையும் நம்புகிறார்கள்.

அதேபோன்று, ஆயுஸ்மான் பாரத் திட்டத்தையும் மக்கள் நம்புகின்றனர். டெல்லியை சேர்ந்த கார் டிரைவர் ஒருவரின் தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. ஆயுஸ்மான் பாரத் திட்ட அடையாள அட்டையை காண்பித்து சிகிச்சை பெறும்படி அவரிடம் கூறினேன். ஆனால், அவர்களுக்கு, ஆயுஸ்மான் பாரத் திட்டம் உள்ளதே தெரியவில்லை.

அவர்கள் அனைத்து மருத்துவமனைக்கு சென்றும் தெரியவில்லை. ஆனால், இந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக நாம் நம்புகிறோம். நோய் வந்தால் பிரதமரின் திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறலாம் என்று நினைப்பது அப்பாவித்தனமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே - ப.சிதம்பரம் கருத்து
தமிழ் இந்தியாவின் தொன்மையான மொழி என்று தமிழ் பேசும் மக்கள் பெருமைப்படுவது நியாயமே என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
2. கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது; தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி - ப.சிதம்பரம்
ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது, அரசு என்ன செய்யப் போகிறது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. நிதி அமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்
நிதி அமைச்சரின் அறிவிப்பில் ஏமாற்றமே மிஞ்சியது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்.
4. இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது;மத்திய அரசு மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
இதயமற்ற அரசு மட்டுமே மக்களுக்கு ஒன்றும் செய்யாது என்று மத்திய அரசு மீது ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.