தேசிய செய்திகள்

பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார் - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேட்டி + "||" + Prime Minister has assured that the rights of tribals will be protected Jharkhand CM Hemant Soren

பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார் - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேட்டி

பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார் - ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பேட்டி
பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார் என்று பிரதமரை சந்தித்த பின் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களைவிட கூடுதலான இடங்களில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11-வது முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார். 

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை  ஹேமந்த் சோரன் சந்தித்து பேசினார்.  

பிரதமரை சந்தித்த பின் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பின் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்தித்து பேசினேன். வரவிருக்கும் நாட்களிலும் பிரதமர் மோடியை சந்தித்து மாநில அரசின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளை முன் வைப்பேன். பழங்குடியினரின் உரிமைகள் காக்கப்படும் என மோடி உறுதியளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.