தேசிய செய்திகள்

மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி + "||" + Maharashtra: 8 dead in huge explosion at chemical factory in Boisar

மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி

மகாராஷ்டிரா: ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் பலி
மஹாராஷ்டிராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் பலியாயினர்.
பால்கர்,

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போய்சாரில் ஒரு ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 8 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொல்வாடே கிராமத்தில் ஆங்க் பார்மா என்ற நிறுவனம் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.ஐ.டி.சி) பகுதியில் அமைந்துள்ளது. இன்று மாலை 7.20 மணியளவில் சில இரசாயனங்கள் பரிசோதனையின்போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயில் சிக்கி 8 பேர் பலியானதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் நடந்த இடத்தில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் நிதி உதவி வழங்குவதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.
2. மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை வெடிவிபத்தில் 12 பேர் பலி
மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
3. மகாராஷ்டிராவில் சாலை விபத்து: பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு
மராட்டியத்தில் பஸ் மீது லாரி மோதிய விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.
4. மகாராஷ்டிராவில் வெள்ளம் : ரித்தேஷ், ஜெனிலியா தேஷ்முக் ரூ.25 லட்சம் நிதியுதவி
மகாராஷ்டிராவில் வெள்ள நிவாரண நிதியாக ரித்தேஷ்-ஜெனிலியா தேஷ்முக் தம்பதியினர் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.