மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி; எடப்பாடி பழனிசாமி உத்தரவு + "||" + 24 people have died of snake bites and Electricity attacked, each Rs 3 lakh financial assistance to the family; Edapadi Palanisamy order

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி; எடப்பாடி பழனிசாமி உத்தரவு

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி;  எடப்பாடி பழனிசாமி உத்தரவு
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டம் பாலப்பட்டு ஜெய்சங்கரின் மகன் ஜெயகாந்த் எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். சாமியாடிகுச்சிப்பாளையத்தை சேர்ந்த ரங்கையனின் மகன் ராமச்சந்திரன் விவசாய நிலத்திற்கு சென்றபோது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

சேரனூரை சேர்ந்த ஏழுமலையின் மகன் ஜெனகன் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். வேலூர் மாவட்டம் பலவன்சாத்தை சேர்ந்த பானுமதியின் மகன் சதீஷ்குமார் தனது வீட்டின் மாடிக்கு சென்றபோது, மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

திருச்சி மாவட்டம் பெருகமணியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் பயின்று வந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சாயதியின் மகன் அஸ்வின்குமார் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். சென்னை பெரம்பூர் வட்டம், வியாசர்பாடி முனுசாமியின் மகன் முருகன் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி இறந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் அருணாச்சலத்தின் குமரன் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து பலியானார். ராணிப்பேட்டை மாவட்டம் ரெட்டிவலம் ஏழுமலையின் மனைவி கமலா விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி இறந்தார். நெமிலி வட்டம் கீழ்க்களத்தூர் மதுரா மானாமதுரையை சேர்ந்த தனபாக்கியத்தின் கணவர் சேகர் விவசாய நிலத்தில் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

தொண்டமாநத்தம் முருகனின் மகன் பிரேம்குமார் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். சாணார்பெண்டை அம்பிகாவின் கணவர் லட்சுமணன் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார்.

திருவாரூர் மாவட்டம் பெருமாளகரம் நாராயணசாமியின் மகன் நாடிமுத்து, விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தபோது மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை கிருஷ்ணதாசின் மகன் சுபாஷ், சதீஷ்குமாரின் மகன் சஜின் சலோ மற்றும் ரோலண்ட் ரமேசின் மகன் மன்மோகன் ஆகிய 3 பேரும் மின்சாரம் தாக்கி இறந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்கல் முனுசாமியின் மகன் சம்பத் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

வேலூர் மாவட்டம் திருவலம் கூட்ரோடு மின்வாரிய குடியிருப்பை சேர்ந்த சுபித்ராவின் கணவர் மதன்குமார் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.

நாகப்பட்டினம் மாவட்டம் பிராயதியங்கரை கணேசனின் மகன் பாலமுருகன் தெருவிளக்கு கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் காட்டுநாவல் ரவிச்சந்திரனின் மகன் அய்யப்பன் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.

சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி மூக்கையாவின் மகன்ஆதித்யா விவசாய நிலத்தில் உள்ள நிலைக்கம்பியை பிடித்தபோது மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். ஈரோடு மாவட்டம் நஞ்சனாபுரம் பழனியின் மகன் சண்முகசுந்தரம் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கல்கிணற்றுவலசை ரமேஷின் மகன் கார்த்தீஸ்வரன் மின்சாரம் தாக்கி பலியானார். விருதுநகர் மாவட்டம் மேலராஜகுலராமன் கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கத்தின் மகன் ஆறுமுகம் பாம்பு கடித்து உயிர் இழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை கிருஷ்ணமூர்த்தியின் மனைவி லட்சுமி பாம்பு கடித்து உயிர் இழந்தார். இந்த செய்திகளை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிர் இழந்த 24 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிர் இழந்த 24 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவந்த சட்டப்பேரவை முற்றுகை போராட்டம் நிறைவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம் நிறைவடைந்தது நீதிமன்றம் தடை வித்திருப்பதால் சட்டப்பேரவையை முற்றுகையிட செல்லவில்லை
2. மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை ஒற்றுமையுடன் செயல்பட வேண்டுகோள்
மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தினர்.
3. எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு, ஆர்.பி.உதயகுமார் கண்டனம்
‘காவிரி டெல்டாவை சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிப்பதா?’, என்று மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கமாட்டோம் என்று கூறிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
5. சேலத்தில் ஐ.பி.எல்.போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
புதிய கிரிக்கெட் மைதானம் திறப்பு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்த அரசு துணை நிற்கும் என்று கூறினார்.