தேசிய செய்திகள்

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு + "||" + Death of the King of Oman; Mourning tomorrow in India

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

ஓமன் மன்னர் மறைவு; இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு
ஓமன் நாட்டின் மன்னர் காலமானதையடுத்து இந்தியாவில் நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓமன் நாட்டில் ஆட்சி செய்து வந்த சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் காலமானார். அவருக்கு வயது 79.  1970-களில் அவரது தந்தை சயித் பின் தைமூரை ஆட்சியில் இருந்து கவிழ்த்துவிட்டு பதவிக்கு வந்த காபூஸ் பின் சையத் அல் சையத், எண்ணெய் வளமிக்க ஓமன் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார்.  இந்நிலையில், நேற்று காபூஸ்  மரணமடைந்ததாக  ஓமன் அரசு தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஓமன் மன்னர் சுல்தான் மறைவுக்கு நாளை இந்தியாவில் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நாளை தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அரசு சார்ந்த பொழுது போக்கு நிகழ்வுகள் எதுவும் நாளை நடைபெறாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா வைரஸ்: இந்தியாவின் உதவியை ஏற்பதை தள்ளிப்போடும் சீனா - வெளிநாடுகளிலும் உயிர்ப்பலி அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துவிட்ட நிலையிலும், இந்த பேரிடருக்கு உதவ முன்வந்துள்ள இந்தியாவின் விருப்பத்தை வேண்டுமென்றே அந்த நாடு தள்ளிப்போட்டு வருகிறது.
2. ஐ.நா. சபையில் இலங்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
போர்க்குற்ற விசாரணையிலிருந்து வெளியேறத் துடிக்கும் இலங்கைக்கு, ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
3. புரோ லீக் ஆக்கி போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்
சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் புரோ லீக் ஆக்கி போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள முன்னணி 9 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும்.
4. கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - ஐ.நா. சபை அறிவிப்பு
கா‌‌ஷ்மீர் பிரச்சினையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று ஐ.நா. சபை அறிவித்துள்ளது.
5. டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் அடிமை மன நிலையை காட்டுகிறது ; சிவசேனா பாய்ச்சல்
டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் இந்தியர்களின் அடிமை மன நிலையை காட்டுவதாக சிவசேனா விமர்சித்துள்ளது.