மாநில செய்திகள்

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ.வில்சனைக்கொன்றவர்களில் ஒருவர் சிக்கியதாகத் தகவல் + "||" + Reportedly, one of Wilson's victims

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ.வில்சனைக்கொன்றவர்களில் ஒருவர் சிக்கியதாகத் தகவல்

களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ.வில்சனைக்கொன்றவர்களில் ஒருவர் சிக்கியதாகத் தகவல்
களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ.வில்சனைக்கொன்றவர்களில் ஒருவர் சிக்கியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தமிழக- கேரள எல்லையில் குமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை ரோட்டில் சோதனைச் சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 57) கடந்த 8-ந் தேதி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

26-ந் தேதி நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அறிவுறுத்தலின்பேரில் சென்னை மற்றும் பெங்களூருவில் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் குமரி மாவட்டம் திருவிதாங்கோடு, நாகர்கோவில் இளங்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களுமான அப்துல் சமீம் (32), தவுபிக் (28) ஆகிய 2 பேர்தான் இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் மீது களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி, தென்மண்டல ஐ.ஜி. சண்முக ராஜேஸ்வரன், டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆகியோர் குமரி மாவட்டத்தில் முகாமிட்டு பயங்கரவாதிகளை விரைந்து பிடிப்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டு வருகிறார்கள்.

கொலையாளிகள், வில்சனை கொலை செய்துவிட்டு கேரள மாநில எல்லையில் நிறுத்தி வைத்திருந்த கார் மூலம் கேரளாவுக்கு தப்பிச் சென்றுவிட்டனர். எனவே தமிழக- கேரள மாநில போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை பிடித்து கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறார்கள். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் சல்லடை போட்டு அலசி பயங்கரவாதிகளை தேடி வருகிறார்கள்.

இந்நிலையில்,  எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கேரளாவின் தென்மலை பகுதியை சேர்ந்த 4 பேருக்கு தொடர்பு உள்ளதாக கேரள போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து  கேரள போலீசார்  தமிழக போலீசாரிடம் ஒப்படைத்த 4 பேரிடம் தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கேரள போலீசாரால் விசாரிக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் வில்சனை சுட்டுக்கொன்றவர் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள காவல்துறை ஒப்படைத்த 4 பேரிடமும் விசாரணையை  தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது.

வில்சனை கொன்றது தவுபிக், அப்துல் சமீம் எனக்கருத்தப்படும் நிலையில் இருவரில் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.