மாநில செய்திகள்

"தமிழகம் - தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன்" - தமிழிசை சவுந்தரராஜன் + "||" + "I will be the bridge between Tamil Nadu and Telangana" Tamilisai Soundarajan

"தமிழகம் - தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன்" - தமிழிசை சவுந்தரராஜன்

"தமிழகம் - தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன்" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, 

இந்திய தொழில் வர்த்தக சங்கம் தூத்துக்குடி சார்பில் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா தூத்துக்குடியில்  நடந்தது. சங்க தலைவர் டி.ஜான்சன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எட்வின்சாமுவேல் பேசினார். சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். 37 சிறந்த ஏற்றுமதியாளர் மற்றும் தூத்துக்குடி துறைமுக உபயோகிப்பாளர் விருதுகளை வழங்கினார். 

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 

பெருமைமிகு ஆளுநராக தெலுங்கானாவில் இருந்தாலும், தாம் தமிழகத்தின் மகள் தான் என்றார். தூத்துக்குடி தம் மனதில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், தென் பகுதியின் மகளாகவே, நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன் என்றும், தெலுங்கானாவில் உள்ள சுற்றுலா, தொழில், நீர் நிலை ஆகியவைகளை தமிழகத்திற்கு கொண்டு வருவது குறித்து ஆராய்ந்து வருவதாக கூறினார்.

அதை, தூத்துக்குடிக்கு எப்படி கொண்டு வருவது என்று சிந்தித்து வருவதாகவும், தமிழகம் மற்றும் தெலுங்கானா இடையே பாலமாக இருப்பேன் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உலக மகளிர் தினம் - தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்களுக்கும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.