மாநில செய்திகள்

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன் குற்றச்சாட்டு + "||" + Tamil Nadu is a training ground for terrorists Radha Krishnan Accusation

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன் குற்றச்சாட்டு

"தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழும் தமிழகம்" - பொன்.ராதாகிரு​ஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகம் தீவிரவாதிகளின் பயிற்சி கூடாரமாக திகழ்வதாக,பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிரு​ஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
அரியலூர்,

அரியலூரில் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்,

உள்ளாட்சித் தோ்தலில் சில இடங்களில் பாஜக தனித்துப் போட்டியிட்டு சில இடங்களில் வென்றுள்ளது. வருங்காலங்களில் கூட்டணியாகச் செயல்பட முயற்சி மேற்கொள்ளப்படும்.

தீவிரவாதிகளால் காவல் உதவிஆய்வாளா் கொல்லப்பட்டது குறித்து சட்டப்பேரவையில் யாரும் விவாதிக்கவில்லை. இதுதொடா்பாக அதிமுக, திமுக கட்சிகள் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சிறுபான்மையினா் வாக்குக்காக கட்சிகள் அரசியல் செய்கின்றன. 

தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  நான் அமைச்சராக இருந்தபோது உள்ளாட்சிகளுக்கு ரூ. 1,700 கோடி நிதி ஒதுக்கினேன். தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசின் நிதி விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.