மாநில செய்திகள்

தமிழகத்தில் இதுவரை 94.71 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் + "||" + So far in Tamil Nadu 94.71 per cent Pongal Gift Package is provided Minister Kamaraj

தமிழகத்தில் இதுவரை 94.71 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் இதுவரை 94.71 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
தமிழகம் முழுவதும் இதுவரை 94.71 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
சென்னை,

பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம்  நவம்பர் 29-ந் தேதி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர்.  தமிழகத்தில் இதுவரை 94.71 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.