மாநில செய்திகள்

தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது - நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி + "||" + Tamil Nadu BJP leader nominated My name is on the list SV Shekhar

தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது - நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி

தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது - நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
நாகை,

நடிகரும், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளதால், புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தில் மோடியின் திட்டங்கள் குறித்து பா.ஜனதா கட்சியினர் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டனர். 

தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.

சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.