தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டி 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை + "||" + Ahead of Republic Day, no flight operations for nearly 2 hrs at Delhi airport for 7 days

குடியரசு தின விழாவையொட்டி 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை

குடியரசு தின விழாவையொட்டி 7 நாட்கள் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை
குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 7 நாட்கள், சுமார் 2 மணி நேரம் விமானங்கள் இயக்கம் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி, டெல்லி விமான நிலையத்தில், குறிப்பிட்ட 7 நாட்கள்(ஜனவரி 18, 20-24, 26), சுமார் 2 மணி நேரம், விமானங்கள் இயக்கப்பட மாட்டாது என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.


குடியரசு தின விழாவுக்காக நடைபெறும் ஒத்திகைக்காகவும், விழா நாளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், வருகிற 18ம் தேதி, மற்றும் 20 முதல் 24ம் தேதி வரையிலும், மற்றும் குடியரசு தின விழா நடைபெறும் நாளிலும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து, விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை ஆகியவை, காலை 10.35 மணி முதல் பகல் 12.15 மணி வரை தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நாட்களில் டெல்லி வழியாக வான்வெளி மூடப்பட உள்ளதால், அனைத்து விமான நிறுவனங்களின் விமான நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல் - கமிஷனர் அறிவிப்பு
நவிமும்பையில் 7 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கமிஷனர் அன்னாசாகேப் மிசல் அறிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...