தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 31-வது நாளாக டெல்லயில் தொடரும் போராட்டம் + "||" + road has been closed for almost a month due to the ongoing anti Citizenship Amendment Act/National Register of Citizens, demonstration in Shaheen Bagh.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 31-வது நாளாக டெல்லயில் தொடரும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : 31-வது நாளாக டெல்லயில் தொடரும் போராட்டம்
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி

டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று  இந்த போராட்டம் 30-வது நாளை எட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்,  அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இக்னோ மாணவர் தொடர்ந்த  பொது நலன் வழக்கை, கடந்த வெள்ளியன்று டெல்லி ஐகோர்ட் நிராகரித்தது. இன்று 31-வது நாளாக போராட்டம் தொடருகிறது.
இந்த போராட்டம் காரணமாக  ஷாஹீன் பாக் சாலை கிட்டத்தட்ட ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது.

மதுரா சாலை மற்றும் கலிண்டி குஞ்ச் இடையேயான சாலை எண் 13 ஏ போக்குவரத்து மூடப்பட்டுள்ளது. நொய்டாவிலிருந்து வரும் மக்கள் டெல்லியை அடைய டி.என்.டி அல்லது அக்ஷர்தம்  செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள் என டெல்லி போக்குவரத்து போலீஸ் தெரிவித்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி தற்கொலைக்கு முயற்சி
விபசாரத்திற்காக பெண்களை கடத்திய வழக்கில் திகார் சிறையில் உள்ள குற்றவாளி சோனு பஞ்சாபன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
2. சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட உரிமையாளர்
சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை ஏவி கடிக்க விட்ட அழகு நிலைய உரிமையாளர்.
3. ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கத்திகுத்து
டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானியிடம் ஐ.ஐ.டி துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த கும்பல் அவரை கத்தியால் குத்தி சென்றது.