தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம் + "||" + The only way out is for the PM to select five of his most articulate critics and have a televised Q and A session with them- P. Chidambaram

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் -ப.சிதம்பரம்
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
புதுடெல்லி

குடியுரிமை திருத்த சட்டம்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 

இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 5 விமர்சகர்களுடன் பிரதமர் மோடி நேரடியாக விவாதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார். அவர் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது;-

பிரதமர் மிகவும் வெளிப்படையான விமர்சகர்களில் ஐந்து பேரைத்  தேர்ந்தெடுத்து அவர்களுடன் விவாதத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த  விவாதத்தை கேட்டு மக்கள் தங்கள் முடிவுகளை எடுத்து கொள்ளட்டும். இந்த ஆலோசனைக்கு பிரதமர் சாதகமாக பதிலளிப்பார் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன் என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டத்தால் யாருடைய உரிமைகளும் பறிபோய்விடவில்லை - நிர்மலா சீதாராமன்
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் யாருடைய உரிமைகளும் பறிபோய்விடவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம்
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளாவை தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. குடியுரிமை திருத்த சட்டம் : கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல், மரியாதை மீறல் -கவர்னர் கோபம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என்று கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கூறினார்.
5. குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு மனு
குடியுரிமை திருத்த சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி சுப்ரீம்கோர்ட்டை கேரள அரசு நாடி உள்ளது.