தேசிய செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ் + "||" + J&K police officer may have been ferrying Hizbul Mujahideen militants to Delhi

பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ்

பயங்கரவாதிகளுக்கு உதவிய டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதியாகவே விசாரணை நடத்தப்படும் -ஜம்மு காஷ்மீர் போலீஸ்
பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைதான டி.எஸ்.பி.யிடம் பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே விசாரணை நடத்தப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் அறிவித்து உள்ளது.
ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தேவிந்தர் சிங், ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளான நவீத் பாபா, ரபி அகமது ஆகியோரை சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பிச் செல்ல காரில் அழைத்துச் சென்றபோது பிடிபட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு, மாநில உளவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தற்போது காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு இணையான முறையிலேயே  தேவிந்தர்சிங்கிடம் விசாரணை செய்யப்படும் என காஷ்மீர் ஐஜி விஜய குமார் தெரிவித்துள்ளார். தேவிந்தர் சிங்குக்கு இந்த மாதத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவதாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.
2. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு எதிரொலி: காஷ்மீரில் செல்போன் சேவை முற்றிலும் சீரடைந்தது
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து காஷ்மீரில் செல்போன் சேவை முழுவதும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் 2 மாவட்டங்களில் இணையதள வசதியும் கொடுக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது- இந்திய ராணுவ தளபதி
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்யப்பட்டதால் பாகிஸ்தானின் பினாமி போர் முடிவுக்கு வந்து உள்ளது என ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே கூறினார்
4. ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனுக்கள் ; உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
5. பன்னாட்டு தூதர்களை சந்தித்த விவகாரம் ; நிர்வாகிகள் 2 பேருக்கு காங்.விளக்கம் கேட்டு நோட்டீஸ்
பன்னாட்டு தூதர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரண்டு பேருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.