மாநில செய்திகள்

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி + "||" + Wilson family of the sub-inspector who was shot dead   Rs 1 crore was awarded   Chief Minister Palanisamy

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

சுட்டுக்கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை வழங்கினார் முதல்வர் பழனிசாமி
களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி உதவித் தொகையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சென்னை

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சனை மர்ம நபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்பினர்.

சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியை முதல்வர் பழனிசாமி வழங்கினார். வில்சனின் மனைவி மற்றும் 2 மகள்களிடம் ரூ.1 கோடி நிதியை தலைமைச்செயலகத்தில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

நிதியை பெற்றுக்கொண்ட பின்னர் வில்சனின் மனைவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது கணவரை கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வாங்கி தருவதாக முதல்-அமைச்சர் கூறி உள்ளார். எனக்கு நேர்ந்த கொடுமை யாருக்கும் ஏற்படக்கூடாது. மூத்த மகளுக்கு தகுந்த அரசு வேலை தருவதாக முதல்வர் கூறி உள்ளார் என கூறினார்.