மாநில செய்திகள்

மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின் + "||" + Pongal will be celebrated   Inspection on the day is reprehensible MKStalin

மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது -மு.க.ஸ்டாலின்

மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது  -மு.க.ஸ்டாலின்
மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் கொண்டாடப்படும் நாளில் ஆய்வு செய்வது கண்டனத்திற்குரியது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

இந்நிலையில் இக்குழு இன்று சென்னை வந்துள்ளது.  இக்குழு மத்திய அரசு அலுவலகங்களில் தனது ஆய்வை வரும் ஜன.14, 15,16 தேதிகளில் நடத்துகிறது. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் "இந்தி மொழிப் பயன்பாடு" குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் -மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2. மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது - சதன்பிரபாகர் எம்.எல்.ஏ. பேச்சு
மு.க.ஸ்டாலின் எப்போதும் முதல்-அமைச்சராக முடியாது என்று பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் பேசினார்.
3. சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் மு.க.ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்ட மன்ற தேர்தல் தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’ தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் விழுப்புரம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
வருகிற சட்டமன்ற தேர்தல்தான் ‘கிளைமாக்ஸ்’. விரைவில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
5. மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவதை தடுக்க திமுகவில் பெரிய கூட்டம் செயல்படுகிறது -காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
ஸ்டாலின் முதல்வராகக் கூடாது என திமுகவில் ஒரு பெரிய கூட்டம் செயல்படுகிறது என காங்கிரஸ் எம்.பி கூறி உள்ளார்.