தேசிய செய்திகள்

ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை -உத்தரகாண்ட் அரசு திட்டம் + "||" + Uttarakhand Minister Rekha Arya: We've a proposal to provide a pension between Rs 7000 to Rs 10,000 per month to acid attack victims

ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை -உத்தரகாண்ட் அரசு திட்டம்

ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை  -உத்தரகாண்ட் அரசு திட்டம்
உத்தரகாண்டில் ஆசிட் வீச்சு தாக்குதலில் பாதிப்படைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில மந்திரி ரேகா ஆர்யா தெரிவித்துள்ளார்.
டேராடூன்,

ஆசிட் வீச்சின் கொடூரம் குறித்து எடுத்துரைக்கும் படம் சப்பக். மேக்னா குல்சார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் தீபிகா படுகோனே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். ஆசிட் வீச்சால்  பாதிக்கப்பட்ட லக்‌ஷ்மி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தை பார்த்த உத்தரகாண்ட் மாநில அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 10 முதல் 11 பேர் வரை ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் லக்ஷ்மி அகர்வாலை அடிப்படையாக கொண்டு ஆசிட் வீச்சால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அம்மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேகா ஆர்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள் கவுரமாக வாழும் வகையில் மாதம்தோறும் 7000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்த அமைச்சரவையில் அனுமதி பெறப்படும் என்றும் துணிச்சலான பெண்கள் அவர்களின் கனவுகளை நனவாக்க இந்த அறிவிப்பு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.