தேசிய செய்திகள்

பாஜக தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா -ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பதாக தகவல் + "||" + JP Nadda to take over as BJP national president on Jan 20: Sources

பாஜக தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா -ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பதாக தகவல்

பாஜக தேசிய தலைவராகிறார் ஜே.பி.நட்டா -ஜனவரி 20-ம் தேதி பொறுப்பேற்பதாக தகவல்
பாஜக செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி,

பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறை பின்பற்றப்பட்டு வருவதால், மத்திய உள்துறை மந்திரி பதவியை அமித்ஷா ஏற்ற நிலையில்,  ஜே.பி.நட்டாவுக்கு பா.ஜ.க. செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

56 வயதான ஜே.பி. நட்டா இமாச்சலப் பிரதேச பாஜக அரசியலிலும் மந்திரியாக இருந்துள்ளார். கட்சியின் ஆட்சிமன்றக் குழுவிலும் உறுப்பினராக இருந்து வருகிறார். எந்தவிதமான சிறிய விமர்சனத்துக்கும் உள்ளாகாதவர். 

இந்நிலையில், பாஜக புதிய தேசிய தலைவராக ஜே.பி.நட்டா  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது பாஜக செயல் தலைவராக உள்ள அவர், வரும் 20-ம் தேதி பாஜக தேசிய தலைவராக பொறுப்பேற்பார் எனவும் கூறப்படுகிறது. 

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, தற்போதைய பாஜக தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஜே.பி. நட்டாவுக்கு தலைவர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.