மாநில செய்திகள்

உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது + "||" + Ijaz Basha arrested for supplying firearms

உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது

உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா கைது
உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் கொலையாளிகளுக்கு துப்பாக்கி வழங்கிய இஜாஸ் பாஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

தமிழக-கேரள எல்லை பகுதியான களியக்காவிளை சந்தை ரோட்டில் உள்ள சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்  வில்சன் (வயது 57) கடந்த 8-ந்தேதி இரவு பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதிகளான அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரையும் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளர் வில்சனை சுடுவதற்கு  பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு கொடுத்து உதவியதாக 9 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா தான் மும்பை சென்று 4 பிஸ்டல் ரக துப்பாக்கிகளை வாங்கி வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.  

இஜாஸ் பாஷாவிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவில் கைதான இஜாஸ் பாஷா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.