தேசிய செய்திகள்

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம் + "||" + BJP will levy token charge of Re 1 for water and power supply if it comes to power in Delhi: BJP MP

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் தண்ணீர், மின்சார கட்டணமாக ஒரு ரூபாய்; பா.ஜ.க. எம்.பி. பிரசாரம்
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் என பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதம் 22-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், பிப்ரவரி 8-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டுகிறது. அதேநேரத்தில் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் படுதீவிரமாக உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி எப்படியாவது கவுரவமான வெற்றியைப் பெற விரும்புகிறது. இதனால் டெல்லி தேர்தல் களம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையில், பல்வேறு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் பா.ஜ.க. எம்.பி. பர்வேஷ் வர்மா முக்கிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது அவர் தேர்தல் வாக்குறுதியாக கூறுகையில்,‘‘டெல்லியில் ஏழைகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என ஆம் ஆத்மி அறிவித்து பதவிக்கு வந்தது. ஆனால் 5 ஆண்டுகள் பதவியில் இருந்தும் இதனை நடைமுறைபடுத்தவில்லை.

ஆனால், டெல்லியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஏழைகளிடம் இருந்து தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும். இதனை கட்சியின் தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்போம். தேர்தல் அறிக்கையில் இதனை சேர்க்கக்கோரி தேர்தல் அறிக்கை கமிட்டியிடம் பரிந்துரைத்துள்ளேன்’’ எனக் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் ஆம்ஆத்மி வெற்றி, பா.ஜ.க. அரசுக்கு பாடம் - காதர் முகைதீன் பேட்டி
‘டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி என்பது, பா.ஜ.க. அரசுக்கு பாடம் கற்பிக்கும் நிலையில் உள்ளது’ என்று காதர் முகைதீன் கூறினார்.
2. சென்னைக்கு தண்ணீர் கிடைக்குமா?: கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் - ஐதராபாத்தில் இன்று நடக்கிறது
ஐதராபாத்தில் கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய கூட்டம் இன்று நடக்கிறது.
3. ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு: தேர்தல் அறிக்கையில் பா.ஜனதா வாக்குறுதி
டெல்லியில் ஆட்சியை பிடித்தால், ஏழைகளுக்கு கிலோ 2 ரூபாய்க்கு தரமான கோதுமை மாவு வழங்கப்படும் என்று பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
4. டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் காயம்
டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
5. டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. சர்ச்சை பேச்சு
டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் பற்றி பா.ஜ.க. எம்.பி. பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.