தேசிய செய்திகள்

ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை + "||" + Asking for the return of the bail amount of Rs 20 crore, Karti Chidambaram plea hearing in the Supreme Court on 17

ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை

ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை
ரூ.20 கோடி ஜாமீன் தொகையை திரும்ப கேட்டு கார்த்தி சிதம்பரம் செய்துள்ள மனு மீது, சுப்ரீம் கோர்ட்டில் 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி. மீது ஏர்செல் மேக்சிஸ், ஐ.என்.எக்ஸ். மீடியா உள்ளிட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் அவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஆண்டு மனுதாக்கல் செய்தேன். அதை விசாரித்த கோர்ட்டு ஜாமீன் தொகை செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என உத்தரவிட்டது. அதன்படி, ரூ.20 கோடி ஜாமீன் தொகை செலுத்தி இருந்தேன்.


ஆனால் வெளிநாடு சென்று வந்த பிறகு அந்த பணத்தை எனக்கு திரும்ப அளிக்கவில்லை. எனவே, நான் செலுத்திய ரூ.20 கோடியை திரும்ப வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு வருகிற 17-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.