மாநில செய்திகள்

போகிபண்டிகை கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு + "||" + Pogi festive celebration Air pollution has increased in Chennai.

போகிபண்டிகை கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

போகிபண்டிகை கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
போகிபண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
சென்னை

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். இந்த நாளில், பழைய மற்றும் தேவையற்ற பொருட்களை எரித்து மக்கள் போகியை கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. 

ஆனால் இன்றைய சூழலில் போகிப் பண்டிகையின் போது பிளாஸ்டிக் பொருட்கள் , ரப்பர் பொருட்கள் போன்றவற்றை எரிப்பதினால் நச்சு மிகுந்த ரசாயன வாயு அதிலிருந்து வெளியேறுகிறது.

இதனால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஆகிறது. சென்னை நகரை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஆண்டும் போகியன்று ஏற்படும் புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு இந்த நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

இதனைத் தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் பொருட்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் ட்யூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிக்கக் கூடாது என்று மாசு கட்டுப்பாடு வாரியம் வலியுறுத்தியுள்ளது.த

தமிழகத்தின் பல பகுதிகளிலும்  இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாக போகிப்பண்டிகை கொண்டாடினர்.

மூடுபனி காரணமாகவும் தொடர்ந்து மக்கள் பொருட்களை எரித்து வருவதாலும் வடசென்னை பகுதிகளில் கடுமையான புகை மூட்டம் காணப்படுகிறது.

காற்றில் தீங்கு ஏற்படுத்தும் நச்சுத்தன்மை நிறைந்த நுண்துகள்களின் அளவு அதிகரித்து உள்ளது.

 போகி பண்டிகைக்காக பழைய பொருட்களை எரித்த காரணத்தால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

மணலியில் 795 குறியீடுகளாகவும் அண்ணாசாலையில் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகத்தில் 272 குறியீடுகளாகவும் ஆலந்தூரில் 161 குறியீடுகளாகவும் குறைந்த பட்சமாக வேளச்சேரியில் 100 ஆகவும் காற்று மாசு பதிவாகியுள்ளது.

50 லிருந்து 100 குறியீடுக்குள் இருந்தால் மட்டும் அது சுவாசிக்க ஏதுவான காற்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் சென்னையில் முற்றிலும் சுவாசிக்க ஏதுவான காற்று இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இந்தக் காற்றால் பல உடல் உபாதைகள் ஏற்படும். குறிப்பாக நுரையீரல் சம்பந்தமான பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு: சென்னையில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி மரணம்
மீனம்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குருமூர்த்தி கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார்.
2. சென்னையில் மீண்டும் பெருவெள்ளம்; மெரினா கடற்கரை காணமால் போகும் ஐஐடி ஆய்வு எச்சரிக்கை
சென்னையில் மீண்டும் பெருவெள்ளம் ஏற்படலாம் மெரினா கடற்கரை காணமால்போகும் என ஐஐடி ஆய்வு ஒன்று எச்சரித்து உள்ளது.