தேசிய செய்திகள்

பாமாயில் இறக்குமதிக்கு தடை : பாகிஸ்தான் பக்கம் தாவும் மலேசியா; இந்தியாவில் விலை உயரும் அபாயம் + "||" + India urges boycott of Malaysian palm oil after diplomatic row: Report

பாமாயில் இறக்குமதிக்கு தடை : பாகிஸ்தான் பக்கம் தாவும் மலேசியா; இந்தியாவில் விலை உயரும் அபாயம்

பாமாயில் இறக்குமதிக்கு தடை : பாகிஸ்தான் பக்கம் தாவும் மலேசியா; இந்தியாவில் விலை உயரும் அபாயம்
பாமாயில் இறக்குமதிக்கு இந்தியாவின் தடையால் மலேசியா பாதிப்பு அடைவது ஒருபுறம் இருக்க, இந்தோனேசியாவில் இருந்து குறைந்த லாபத்தில் இறக்குமதி செய்வதால் பாமாயில் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளன.
புதுடெல்லி,

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது அண்மையில் மதச்சார்பற்ற நாடு என்று  கூறும் இந்தியா இப்போது முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க நடவடிக்கை எடுத்து வருவதைக் கண்டு நான் வருந்துகிறேன். "நாங்கள் அதை இங்கே  செய்தால், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும். குழப்பம் இருக்கும், உறுதியற்ற தன்மை இருக்கும், எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்" என்று அவர் கூறினார் என கடந்த டிசம்பர் மாதம் 20-ந் தேதி பேசி இருந்தார்.

இதற்கு இந்திய தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மலேசியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்தியா - மலேசியா இடையேயான வர்த்தக உறவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

மலேசியாவிலிருந்து பாமாயில் வாங்க வேண்டாம் என்று அரசாங்கம்  இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதால் இறக்குமதியாளர்கள்  இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய  தொடங்கியுள்ளனர்.

இறக்குமதி குறைவதால் மலேசியா பாதிப்பு அடைவது ஒருபுறம் இருக்க,  இந்தோனேசியாவில் இருந்து குறைந்த லாபத்தில் இறக்குமதி செய்வதால்,  பாமாயில் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளன. அதோடு, ரேஷனில்  வழங்கப்படும் மானிய விலை பாமாயிலுக்கு அதிக கிராக்கி வரும்.  கள்ளச்சந்தையில் அவை விற்கப்படலாம் என வர்த்தகர்கள்
தரப்பில் கூறுகின்றனர்.

இறக்குமதி தடையால் மலேசியாவுக்கு பொருளாதார ரீதியாக அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில், மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாமாயில் 2.8 சதவீதமாக உள்ளது. மொத்த ஏற்றுமதியில் 4.5 சதவீதம் பாமாயில் பங்களிப்பு உள்ளது. மலேசியா தனது பாமாயில் வர்த்தகத்தை பாகிஸ்தானுடன் விரிவுபடுத்தக்கூடும் என்று அரபு செய்தி தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், மலேசியாவிலிருந்து 2.97 பில்லியன் (730 மில்லியன் டாலர்) மதிப்புள்ள 1.16 மில்லியன் மெட்ரிக் டன் பாமாயிலை பாகிஸ்தான் இறக்குமதி செய்தது.

நாம் பாமாயில்களில் 30 சதவீதத்தை மலேசியாவிலிருந்து இறக்குமதி  செய்கிறோம், 70 சதவீதம் இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம்.

உலகின் மிகப்பெரிய தாவர எண்ணெய்களை இறக்குமதி செய்யும் இந்தியா, ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 15 மில்லியன் டன்களை வாங்குகிறது. இதில், பாமாயில் 9 மில்லியன் டன்களும், மீதமுள்ள 6 மில்லியன் டன் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெயும் அடங்கும்.

இந்தியாவிற்கு பாமாயில் சப்ளை செய்யும் இரு நாடுகள் இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகியவை ஆகும்.

மலேசியா ஒரு வருடத்தில் 19 மில்லியன் டன் பாமாயிலை உற்பத்தி செய்கிறது, இந்தோனேசியா 43 மில்லியன் டன்களை உற்பத்தி செய்கிறது என்று வர்த்தக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழையத் தடை
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
2. பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனா புதிய மரபணு மாற்றம் அதிர்ச்சி தகவல்
பத்து மடங்கு அதிகம் பரவும் தன்மை உடைய வைரசாக கொரோனாவைரஸ் புதிய மரபணு மாற்றம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.