தேசிய செய்திகள்

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் + "||" + Trump likely to visit India at the end of February, say sources

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்

பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார்
பிரதமர் மோடி அழைப்பை ஏற்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பிப்ரவரி மாதம் இந்தியா வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி, 

கடந்த 7-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலின் போது, டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் இந்திய மக்களுக்கு, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாகவும் டிரம்ப் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி இந்தியா வருமாறு அழைப்பு  விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட டிரம்ப் பிப்ரவரி மாத இறுதியில் இந்தியா வருகிறார் என தகவல்  வெளியாகி உள்ளது.

டொனால்ட் டிரம்பின் வருகைக்கு முன்னதாக வாஷிங்டனில் இருந்து  பாதுகாப்பு மற்றும் தளவாடங்கள் குழுக்கள் இந்த வாரம் டெல்லிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

டொனால்ட் டிரம்ப் பிப்ரவரி 24-ந்தேதி இந்தியா வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிகாரபூர்வ அறிவிப்பு இல்லை தேதி பின்னர் மாறுபடலாம்.

டிரம்பின் இந்திய பயணத்தின் முக்கிய மைய புள்ளியாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இருக்கும். அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளாக இருந்த சிவில் விமான போக்குவரத்து, தரவு  உள்ளூர் மயமாக்கல் மற்றும் ஈ-காமர்ஸ் தொடர்பான ஒப்பந்தங்களும் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி இன்று 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி இன்று உத்தரகாண்டில் 6 மிகப்பெரிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
2. மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேச்சு
மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக குரல் எழுப்ப இந்தியா தயங்காது- ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது பொதுச் சபையில் பிரதமர் மோடி பேசினார்.
3. கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது: பிரதமர் மோடி
கால மாற்றத்திற்கேற்ப ஐநா தனது செயல்களை மாற்ற வேண்டியுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
4. உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் - பிரதமர் மோடி
உடல் வலிமையாக இருக்கும் போதே மனமும் முழு வலிமையுடன் செயல்படும் என பிரதமர் மோடி கூறினார்.
5. தமிழகம் உள்பட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
தமிழகம் உள்பட 7 மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...