தேசிய செய்திகள்

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு + "||" + Conflict with DMK   Tamilnadu Congress leader Alagiri Sudden encounter with Sonia Gandhi

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு

திமுகவுடன் மோதல் : தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியுடன் திடீர் சந்திப்பு
திமுகவுடன் மோதல் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி,

குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் திரும்பப் பெற வலியுறுத்தி  காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான திமுக இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த  பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கனவே தமிழக காங்கிரசுக்கும் - திமுகவுக்கும் இடையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மனக்கசப்பு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பதவிகள் வழங்குவதில் திமுக கட்சியினர் கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி சார்பில்  குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இதைத் தொடர்ந்துதான் சோனியாகாந்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது என கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு  சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்து இருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லியில் அழகிரி சோனியா காந்தியை சந்தித்து  பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அவர்  விளக்கினார் என கூறப்படுகிறது. தமிழக அரசியல் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியா கேட் அருகே டிராக்டர் எரிப்பு: காங்கிரசை சேர்ந்த 6 பேர் கைது
புதிய வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கேட் அருகே டிராகடர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. பிரதமர் மயில்களுடன் பிஸி நம்மை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் - ராகுல்காந்தி கிண்டல்
மோடி மயில்களுடன் பிஸியாக இருப்பதால், நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
3. திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு: திமுக தலைவர், பொதுச்செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு
திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4. வரும் 9-ஆம் தேதி தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு
வரும் 9 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5. தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் - ஜே.பி.நட்டாவுக்கு ஸ்டாலின் பதில்
தமிழ் பண்பாட்டிற்கும், இந்திய ஒருமைப்பாட்டுக்கும் ஒரே எதிரி பாஜக தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...