தேசிய செய்திகள்

சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது + "||" + Retail inflation rises to 5-year high of 7.35% while economic growth is on decline

சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது

சில்லறை பணவீக்கம் 7.35% உயர்ந்து உள்ளது -பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்தது
6 ஆண்டுகள் இல்லாத அளவு சில்லறை பணவீக்கம் 7.35% ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது.
மும்பை

சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத  வகையில் மிக  உயர்வான 7.35 சதவீதமாக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து உள்ளது. இது 2014 முதல் நரேந்திர மோடி அரசாங்கத்தில் கண்ட மிக உயர்ந்த சில்லறை பணவீக்கம் ஆகும்.

உணவு விலைகள் கணிசமாக உயர்ந்து, தொலைத் தொடர்பு கட்டண உயர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சில்லறை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 5.54 சதவீதத்திலிருந்து டிசம்பர் மாதத்தில் 7.35 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் அதிகாரப்பூர்வமாக நுகர்வோர் விலைக் குறியீடு என்று அழைக்கப்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் அளவான 6  சதவீதத்தை தாண்டி உள்ளது. மேலும் பிப்ரவரி மாதத்தில் மத்திய வங்கிக்கு வட்டி விகிதங்களைக் குறைப்பதை இது தடுக்கக்கூடும்.

அதிக பணவீக்கம், குறைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிக வேலையின்மை ஆகியவற்றுடன், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைத் தவிர்க்க முடியாத  தேக்க நிலைமைக்கு தள்ளியுள்ளது.

டிசம்பர் மாதத்தில் சில்லறை பணவீக்கம் உயர்ந்தது. விலையுயர்ந்த காய்கறிகளால் உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளது. பருப்பு வகைகள் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் - உலக வங்கி
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கியின் தலைமை பொருளாதார வல்லுநர் கூறினார்.
2. சிறந்த வணிகச் சூழலை உருவாக்கும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி கவுன்சிலுக்கு சீனா கடிதம்
அமெரிக்காவின் பதற்றங்களுக்கு மத்தியில் சிறந்த வணிகச் சூழலை உருவாக்க சந்தை திறப்பை சீனா விரிவுபடுத்தும் என அதிபர் ஜி ஜின்பிங் வெளிநாட்டு நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்குகடிதம் எழுதி உள்ளார்.
3. பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு குழு அமைப்பு
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கநாதன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
4. கொரோனா பாதிப்பு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை கவர்ந்திழுக்கும் இந்தியா
கொரோனா பாதிப்பால் சீனாவில் இருந்து வெளியேறும் 1,000 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கவர்ந்திழுக்கிறது.
5. கொரோனா பாதிப்பு: குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை தொடங்கும்
கொரோனா கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே குடிசைத் தொழில்கள் அடுத்த வாரத்தில் மெதுவாக பணிகளை தொடங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியரின் தேர்வுகள்...