மாநில செய்திகள்

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + In despair of not being promoted Pon rathakirushnan Criticizes the state gov. Minister Jayakumar

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார் -அமைச்சர் ஜெயக்குமார்
பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக அரசை விமர்சிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை

சென்னை சைதாப்பேட்டை மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

பதவி கிடைக்காத விரக்தியில் பொன்.ராதாகிருஷ்ணன் அரசை விமர்சிக்கிறார். சட்டம்-ஒழுங்கு உட்பட பல்வேறு துறைகளில், தமிழ்நாடு  சிறந்து விளங்குவதாக மத்திய அரசு விருதுகள் அளித்து வரும் நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனின் புகார் ஏற்புடையது அல்ல.

மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாட்டை, மாநில அரசு நிர்வாகத்தை பாராட்டும் நிலையில், தவறான கருத்துகள் மூலம் பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய பாஜக அரசை எதிர்க்கிறாரா?  என கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று பாஜக மூத்த  தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. காணாமல் போன மீனவர்கள் மீட்பு: மியான்மர் நாட்டில் இருந்து அழைத்து வரப்படுகிறார்கள் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
தமிழக அரசின் முயற்சியால் காணாமல் போன மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மியான்மர் நாட்டில் இருந்து அவர்கள் அழைத்து வரப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2. சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
சசிகலா சிறையில் இருந்து வருவதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
3. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதா நிச்சயம் போட்டியிடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
4. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? என்பது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.
5. ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும் - அமைச்சர் ஜெயக்குமார்
ஹெச்.ராஜாவின் ஆண்மை குறித்து அனைவருக்கும் தெரியும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.