தேசிய செய்திகள்

பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி + "||" + perarivazan case: In the report filed by the CBI Supreme Court justices dissatisfied

பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி

பேரறிவாளன் வழக்கு : சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், சிபிஐ புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி  சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடர்ந்துள்ளார். 

ராஜீவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டில் வைக்கப்பட்ட பேட்டரியை வாங்கி கொடுத்ததாக தன் மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், ஆனால் அந்த குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்றும் பேரறிவாளன் தனது மனுவில் கூறியிருந்தார். 

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், அதிருப்தி தெரிவித்தனர்.

ராஜீவை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு குறித்து சிபிஐ தாக்கல் செய்த அறிக்கையில் எந்த புதிய விஷயமும் இடம்பெறவில்லை என்று கூறிய நீதிபதிகள், இது தொடர்பாக புதிய அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் - பிரசாந்த் பூஷண்
எனது வழக்கறிஞர் ராஜீவ் தவான் உடனடியாக வழங்கிய ஒரு ரூபாய் நன்கொடையை நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன் என பிரஷாந்த் பூஷண் கூறி உள்ளார்.
2. தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங்குடனான உறவு குறித்து நடிகை ரியா பரபரப்பு தகவல்
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் அவருடனான உறவு குறித்து நடிகை ரியா சக்ரபோர்த்தி பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். ரியா சக்ரபோர்த்தி மனு மீது சுப்ரீம் கோர்ட்டு 5-ந் தேதி விசாரிக்கிறது.
3. 35 குழந்தைகளுக்கு கொரோனா: எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - பதிலளிக்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சென்னை ராயபுரம் காப்பகத்தில் 35 குழந்தைகளுக்கு கொரோனா வந்தது பற்றி தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.