தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டதிருத்த போராட்டம் : ஜமா மஸ்ஜித் பாகிஸ்தானில் இல்லை -அரசு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம் + "||" + CAA protests: Delhi court pulls up cops, says 'Jama Masjid not in Pakistan'

குடியுரிமை சட்டதிருத்த போராட்டம் : ஜமா மஸ்ஜித் பாகிஸ்தானில் இல்லை -அரசு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்

குடியுரிமை சட்டதிருத்த போராட்டம் : ஜமா மஸ்ஜித் பாகிஸ்தானில் இல்லை -அரசு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம்
ஜமா மஸ்ஜித் பாகிஸ்தானில் இல்லை என்று அரசு வக்கீலுக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டிசம்பர் 20-ம் தேதி போலீஸ்  அனுமதியின்றி ஜமா மஸ்ஜித்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரை ஆர்ப்பாட்ட  அணிவகுப்பு நடத்த ஆசாத் சந்திரசேகர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த போராட்டத்தின் போது தரியங்கஞ்சில் வன்முறை வெடித்ததை அடுத்து ஆசாத் சந்திர சேகர் கைது செய்யப்பட்டார்.

ஆசாத் சந்திரசேகர் டெல்லி ஐகோர்ட்டில்  ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணையில் முழுமையாக ஒத்துழைக்க அவர் தயாராக இருப்பதாகவும், எந்தவொரு ஆதாரத்தையும் சேதப்படுத்தவோ அல்லது எந்த சாட்சிகளையும் கலைக்கவோ மாட்டேன் என்றும் ஆசாத் கூறி இருந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி காமினி லாவ், அரசு வழக்கறிஞரிடம் நீங்கள் ஜமா மஸ்ஜித் பாகிஸ்தானில் இருப்பது போல நடந்து கொள்கிறீர்கள். அது  பாகிஸ்தானாக இருந்தாலும் நீங்கள் அங்கு சென்று எதிர்ப்பு தெரிவிக்க  முடியும். பாகிஸ்தான் பிரிக்கப்படாத இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.  ஆசாத்தின் எந்த பதவிகளும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை அல்ல"  "தர்ணாவில் என்ன தவறு? எதிர்ப்பு தெரிவிப்பதில் என்ன தவறு? அமைதியாக எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு தனிநபரின் அரசியலமைப்பு உரிமை என கூறினார்.

மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் நாளை தினத்துக்கு ஒத்திவைத்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...