மாநில செய்திகள்

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து + "||" + Governor Panvaril to the Purohit Chief Minister Edappadi Palanisamy Pongal congratulates

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
சென்னை,

பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு  தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சி, வளம் பெருக வாழ்த்துவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு,கவர்னர் தனது நன்றியையும், பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்து மலர்கொத்துடன் பதில் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அதில்,  பொங்கல் திருவிழாவில், தங்களுக்கும், தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி, வளம் பொங்க வாழ்த்துவதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிரியர்கள் வாழ்க்கை ஒளிவுமறைவற்றதாக இருக்க வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
ஆசிரியர்களின் வாழ்க்கை ஒளிவுமறைவற்றதாக இருக்க வேண்டும் என வேலூரில் நடந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
2. வேளாண் பல்கலைக்கழகத்தில் மாங்கன்று அடர்நடவு முறையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்
வேளாண் பல்கலைக்கழகத்தில் மாங்கன்று அடர்நடவு முறையை கவர்னர் பன்வாரிலால் புரோகித் பார்வையிட்டார்.
3. ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை கல்லூரிகள் தத்தெடுக்க வேண்டும்; உயர்கல்வி மாநாட்டில் கவர்னர் வேண்டுகோள்
அனைத்து கிராமங்களும் மேம்பாடு அடைய கல்லூரிகள் ஆண்டொன்றுக்கு ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று உயர்கல்வி மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
4. பாரதியாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
பாரதியாரின் சிந்தனைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்று பாரதியார் பிறந்தநாள் விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
5. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரெயிலில் சிதம்பரம் வருகை
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரெயில் மூலம் நேற்று இரவு சிதம்பரத்திற்கு வந்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை