மாநில செய்திகள்

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு + "||" + There is no difference between the DMK and AIADMK parties in bribery SwaminathanGurumurthy

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு
லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை என துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசினார்.
சென்னை,

சென்னை கலைவாணர் அரங்கில் துக்ளக் இதழின் 50வது ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதாவது:-

குடியுரிமை சட்டத்தை மாற்ற வேண்டும் என சொன்னவர் நேரு.  குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தவறான பிரசாரம்  செய்கின்றன.

ஜேஎன்யூ-வின் மரபணு நாட்டுக்கு எதிரானது. எனவே ஜேஎன்யூ திருத்தப்பட வேண்டும், முடியாவிட்டால் மூடப்பட வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ளது மிகவும் ஆபத்தானது.

இன்னும் மூன்று அல்லது ஆறு மாதத்தில் நாட்டின் பொருளாதார நிலை மாறும். முழுமையாக இந்து மாநிலம் என்றால் தமிழகம் தான்,  கலாச்சார ரீதியாக இந்துவாக  இருந்தாலும், அரசியல் ரீதியாக இங்கே இந்துக்கள் இல்லை. தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்து விட்டது. காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் கூட்ட முடிவதில்லை. 

லஞ்சத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் வேறுபாடு இல்லை. ரஜினிக்கு அவருக்கு முன்னர் உள்ள பொறுப்பு என்ன என்பது தெரியும். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். நாத்திக அரசியலின் முதுகெலும்பை  உடைத்தவர். சாமானியர்களின் 70 சதவீத சேமிப்பு வங்கிக்கு போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.