தேசிய செய்திகள்

காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - சக வீரர்கள் இருவர் பலி + "||" + Udhampur: CISF jawan opens fire on colleagues over argument, 2 killed

காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - சக வீரர்கள் இருவர் பலி

காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூடு - சக வீரர்கள் இருவர் பலி
காஷ்மீரில் மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சக வீரர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
காஷ்மீர்,

ஜம்மூ-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள சுய் கிராமத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் முகாம் உள்ளது. இங்கிருந்த வீரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் பொறுமையை இழந்த வீரர் ஒருவர், சக வீரர்களின் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படையை சேர்ந்த பி.என்.மூர்த்தி மற்றும் முகமது தஸ்லீம் ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

இந்த சம்பவம் குறித்து பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
4. காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.