தேசிய செய்திகள்

இமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை + "||" + Guinness World Record for 1,995 kg ''khichdi'' cooked in Himachal

இமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை

இமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை
இமாசல பிரதேச சுற்றுலாத்துறை 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து உள்ளது.
சிம்லா,

குளிர்பிரதேசங்களில் ஒன்றான இமாசல பிரதேச மாநிலத்தின் மாண்டி மாவட்டத்தில் தட்டபனி கிராமம் உள்ளது. சட்லஜ் நதிக்கரையில் அமைந்து உள்ள இந்த கிராமம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனித யாத்ரீகர்களின் விருப்பமிகு பகுதிகளில் ஒன்றாகும். 

இயற்கையின் ரம்மியத்தை சுற்றிப்பார்க்க இங்கு சுடுநீர் அருவி, சிவன் குகை, மகுநாக் கோவில் என்று ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் அந்த மாநில சுற்றுலாத்துறையால் சுற்றுலா திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம்.

இந்த நிலையில், இன்று மகா சங்கராந்தி தினத்தை முன்னிட்டு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரே பாத்திரத்தில் 1995 கிலோ கிச்சடி தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. 

மேலும் தயாரிக்கப்பட்ட கிச்சடியானது யாத்ரீகர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து இமாசல பிரதேச சுற்றுலாத்துறை இயக்குனர் யூனிஸ் கூறுகையில், கிச்சடி தயாரிக்கும் திட்டம் சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்கான ஒரு முயற்சி. கின்னஸ் புத்தகத்திலும் இந்த சாதனை இடம் பிடித்து விட்டது. 

இதற்கு முன்னர் 918.8 கிலோ கிச்சடி தயாரித்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. நாங்கள் அரிசியைக் கொண்டு 1995 கிலோ கிச்சடி தயாரித்து முந்தைய சாதனையை முறியடித்து உள்ளோம். 25 நபர்களை கொண்ட குழு இந்த கிச்சடியை தயாரித்தது. தட்டபனியை உலக சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வரவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.

கிச்சடி தயாரிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கூறுகையில், கிச்சடி தயாரிக்க 6 முதல் 7 மணி நேரம் ஆனது. 405 கிலோ அரிசி, 190 கிலோ பருப்பு, 90 கிலோ எண்ணெய், 55 கிலோ நறுமண பொருட்களைக் கொண்டு கிச்சடியை தயாரித்தோம். மகா சங்கராந்தியை முன்னிட்டு இந்த பணியை மேற்கொண்டோம் என்றார்.

இமாசல பிரதேச முதல்-மந்திரி ஜெய்ராம் ரமேஷ் அந்த மாநில சுற்றுலாத்துறை சார்பில், கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.