மாநில செய்திகள்

பேசுவதற்கு இங்கு சுதந்திரம் இல்லை, அதற்கு நேரம் வரும் அப்போ பேசுவேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு + "||" + There is no freedom here to speak Rajinikanth

பேசுவதற்கு இங்கு சுதந்திரம் இல்லை, அதற்கு நேரம் வரும் அப்போ பேசுவேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு

பேசுவதற்கு இங்கு சுதந்திரம் இல்லை, அதற்கு நேரம் வரும் அப்போ பேசுவேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
பேசுவதற்கு இங்கு சுதந்திரம் இல்லை, அதற்கு நேரம் வரும் அப்போ பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சென்னை,

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் துக்ளக் சிறப்பு மலரை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவிடமிருந்து நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். 

விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு. பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ. குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம், இதுவும் தந்தைக்குரிய பதவியே. சோவை போலவே துக்ளக் இதழை கொண்டு செல்கிறார் குருமூர்த்தி.

முரசொலி வைத்திருந்தால் திமுகக்காரர் என்பார்கள்,  துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள். பாலையும், நீரையும் பிரிப்பது போன்று உண்மையையும், பொய்யையும் பிரிக்க வேண்டும்.

பால் போன்று இருக்கும் உண்மையான செய்தியில் தண்ணீரை கலந்துவிடக் கூடாது. சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது.

சோ ராமசாமியையும், துக்ளக் பத்திரிகையையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்கள் இருவர்.ஒருவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, மற்றொருவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி. கவலைகள் அன்றாடம் வரும்,அதை நிரந்தரமாக்கிக் கொள்வதும், தற்காலிகமாக்கிக் கொள்வதும் நமது கையில் தான் இருக்கிறது.

தற்போதைய சூழலில் சோ போன்ற பத்திரிகையாளர் அவசியம் தேவை. 

இவ்வாறு  நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை நான் மனதார வரவேற்கிறேன் - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு
மத்திய அரசின் காஷ்மீர் நடவடிக்கையை மனதார வரவேற்பதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன்-அர்ஜுனன் போன்றவர்கள் என்று பாராட்டினார்.