தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி + "||" + Nirbhaya gangrape-murder case: Convict Mukesh files mercy petition, seeks stay on death warrant

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை: ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் என்பவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.
புதுடெல்லி, 

நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வருகிற 22–ந்தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதற்கான உத்தரவு (மரண வாரண்டு) கடந்த 7–ந்தேதி பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து இந்த மனுவை அவர் தாக்கல் செய்திருப்பதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, டெல்லி கோர்ட்டு பிறப்பித்திருந்த மரண வாரண்டுக்கு எதிராக ஐகோர்ட்டில் மனு ஒன்றையும் இன்று முகேஷ் குமார் தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா? என்பது விரைவில் தெரியவரும்.