மாநில செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி + "||" + Avaniapuram Jallikattu:Trouble in sending cows to Wadiwasal Light batons

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு:வாடிவாசலுக்கு மாடுகளை அனுப்புவதில் குளறுபடி லேசான தடியடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை

அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது.

அவனியாபுரம்-திருமங்கலம் சாலையில் இதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் உள்ளே வராமலிருக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.

மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம், திருச்சி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்படும். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழு, இன்று காலை 8 மணிக்கு போட்டியை தொடங்கி வைத்தது. 

* காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜல்லிக்கட்டு மாடுகளை அனுப்பும் டோக்கன் குளறுபடியால்   மாடு உரிமையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர். 

* காளைகலை அடக்கும் வீரர்களுக்கு அண்டா, குக்கர் என விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும்; பரிசோதனை எண்ணிக்கையை குறைக்கவில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரையில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதற்காக பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
2. மதுரையில் தொற்று குறைந்து உள்ளது -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரையில் தொற்று குறைந்து உள்ளது என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறி உள்ளார்.
3. மதுரை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
மதுரை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
4. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து: ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மதுரையில் வங்கி சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
5. சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கிகள் எவ்வளவு நேரம் செயல்படும்? - கூட்டமைப்பு அறிவிப்பு
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வங்கிகள் செயல்படும் நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...