சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து + "||" + At the Boisegarden Home in Chennai Rajinikanth for cigars
Pongal greeting in person
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி,ராகுல்காந்தி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். காலை 9.40 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு இரு கரம் கூப்பி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.
தான் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரது திடீர் அறிவிப்பு, சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு ரத்த அழுத்தம் தொடர்ந்து அதிகமாகவே இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.