உலக செய்திகள்

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு + "||" + Iraq's Sadr calls for anti-US protests amid new rocket attack

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு

அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு
மீண்டும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வலியுறுத்தி பிரமாண்ட பேரணி ஈராக் தலைவர் அழைப்பு விடுத்து உள்ளார்.
பாக்தாத்|

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 3 ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். ஜனாதிபதி டிரம்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் கூறியது. இந்த தாக்குதலைதொடந்ர்து அமெரிக்க ராணுவத்தை வெளியேறுமாறு  ஈராக் பாராளுமன்றம் கேட்டு கொண்டு உள்ளது.

ஈராக் பாராளுமன்றம் ஜனவரி 5-ம் தேதி  வாக்களிப்பு மூலம் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.  2014 முதல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு  எதிராக போரிட அமெரிக்கா அங்கு முகாமிட்டது. அங்கு சுமார் 5200 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்ளனர்.

அமெரிக்கப் படைகளின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், நேற்று இரவு கத்யுஷா ராக்கெட்டுகள் பாக்தாத்திற்கு வடக்கே ஈராக்கிய விமானத் தளத்தை குறிவைத்து தாக்கின.  அங்கு அமெரிக்கத் தலைமையிலான கூட்டணிப் படைகள் முகாமிட்டு உள்ளன. 

இந்த நிலையில்  அமெரிக்க ராணுவத்தை வெளியேற  வலியுறுத்தி ஈராக் தலைவர் மொக்தாதா சதர்  அமெரிக்க ராணுவத்திற்கு  எதிராக மிகப்பெரிய போராட்ட பேரணி நடத்த மக்களுக்கு  அழைப்பு விடுத்து உள்ளார். ஈராக்கின் வானம், நிலம் மற்றும் இறையாண்மை ஆகியவை ஒவ்வொரு நாளும் படைகளை ஆக்கிரமிப்பின் மூலம் மீறப்படுகின்றன என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்து விடும்: டிரம்ப் நம்பிக்கை
ஏப்ரல் மாதத்திற்குள் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைத்து விடும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை:சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வழக்கு தள்ளுபடி செய்ய அமெரிக்க கோரிக்கை
பொருளாதாரத் தடைகளை நீக்கக் கோரி ஈரான் கொண்டு வந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்காவின் வழக்கறிஞர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளை கேட்டுக்கொண்டனர்.
3. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
4. அமெரிக்காவில் டிக் டாக் செயலியை தொடர ஆரக்கிள் நிறுவனத்துடன் பைட் டான்ஸ் கைகோர்ப்பு
டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வி அடைந்து விட்டது.
5. ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்பட 10 ஆயிரம் இந்தியர்களை சீனா உளவு பார்த்ததா?
இந்தியாவுடன் சமீப காலமாக அதிக மோதல் போக்கை சீனா கையாண்டு வருகிறது.