தேசிய செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி + "||" + formation of the committee hold Avaniapuram Jallikattu  case against Supreme Court dismissed

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த குழு அமைக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரபட்ட மனு தள்ளுபடி செய்யபட்டது.
புதுடெல்லி,

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான குழுவில் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்க்க வேண்டும். கலெக்டர் அமைத்துள்ள கமிட்டியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அருந்ததியினர் சமுதாயத்தை சேர்ந்தவரை கமிட்டி உறுப்பினராக சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் மதுரை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்குகள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழாவை சுமுகமாக நடத்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து நடத்த உத்தரவிட்டது.  அதன் படி இன்று ஜல்லிக்கட்டு தொடங்கி நடந்து வருகிரது.

மதுரை ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.கண்ணன் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பல ஆண்டுகளாக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வருகிறது. இது எங்களது பாரம்பரிய உரிமை ஆகும். ஆனால் ராமசாமி என்பவரது மனுவை விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்துள்ளது. இது எங்களது பாரம்பரிய உரிமைக்கு எதிரானது. எனவே மதுரை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு  சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது

விசாரணையில் தற்போது உள்ள  நிலையில் ஜல்லிக்கட்டை நிறுத்த நாங்கள் விரும்பவில்லை. வேண்டுமானால் நீங்கள் மேல்முறையீடு செய்யலாம் என மனுவை தள்ளுபடி  செய்தனர்.